Homeகட்டுரைகள்காஃபி வித் கபிலர் - 'நிறைவின் உணர்வு'

காஃபி வித் கபிலர் – ‘நிறைவின் உணர்வு’

நல் எழுத்து என்பது என்ன? அப்படி என்ன செய்து விடும் அது? எழுதுபவருக்கு ஒரு நிறைவின் உணர்வு! அதை வாசிப்பவருக்கும் அதே ததும்பலை தந்துவிடின்….. சுபம்!
உங்க எழுத்திலும் வாசித்துக் கொண்டே இருக்கையில் நிகழ்ந்து விடுகிறது அந்த சுகானுபவம்! அதிலும் சங்கப்பாடல்களை முன்வைத்து அனுபவமும் சார்ந்து வந்த இந்த பதினேழு கட்டுரைகளும் செம.. அழகு! சொற்சுவையும் பொருட்ச்சுவையும் கூடி வந்த இந்த அருமையான பாடல்களை தேடித் தேடித்தான எடுத்திருப்பார்னு நினைக்கிறப்போ…. அந்த choice க்கு first ஒரு 🤝💐!

இந்தத தொகுப்ப வாசிச்சு முடிக்கிறப்போ அப்படியே… வந்து நிக்கிற அந்த சங்க கால சொற்கள்! ஆஹா ரகம்! நீயலேன் … தெறூம் தெய்வம்… பையுள் மாலை… எமியம் தமியர் … துஞ்சலமே….
மணி மருள் பூவின்.. புன்கண் மாலை…. நனைமுதிர் ஞாழற் ..சினை மருள்திறல் வீ… இப்படி சொல்லிட்டே போலாம்… தமிழ் மொழியின் அந்த வளம்!

இந்தச் சொற்கள் எல்லாம் “அர்த்தம்” மட்டும் இல்ல; ஒரு காலத்தின் பொக்கிஷம்.
வாசிச்சு முடிச்சதும் அவை வந்து நம்ம முன்னாடி நிக்குது—
“நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம்”ன்னு சொல்ற மாதிரி.

ஆனா பர்சனலா எனக்கு ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புன்முறுவலையோ .. விழி நீரையோ … பெருமிதத்தையோ … இல்ல ஒரு ஆழ்ந்த யோசனையோ … வந்திடுறப்போ …. ஒரு மாதிரி overwhelming ஆகிற அளவு sema narration!

சேதுக்கரசியக்கா என் மனுஷனை காப்பாத்துய்யான்னுட்டு …. மனசே கேக்கலடான்கிறப்போ … சாந்தமாயிடறாராம் அந்த அய்யனார் !
பக்தியா? …. மனசு சரண்டர் ஆகிற அந்த புள்ளியா? … செம நிசப்தம் அங்க .

ரு சிறிய புன்னகை , புருவ உயர்த்தல், நலம் விசாரித்தல்னு பக்குவமான பிரிவினை வாசிக்கிறப்போ லைட்டா … சிரிப்பு வந்தது. அந்த Chapter ல ஒரு லைன் வரும் “யோசித்து பார்த்தால் ஏதோ காரணத்திற்காக பிடித்த ஒருவர் பிடிக்காமல் போகிறார் எனும் போது விலகி வழிவிடுதல் தானே சரியான ஒன்று.!” But எல்லா பிரிவும் பிடிக்காம போறதன் நிமித்தம் இல்லையே! Meaning to say…அப்படி லகுவாக பிரியனும்னா பிடிக்காம போயிடனும்.. நைஸ். dangerous philosophy !
Infact— life-hack மாதிரி கூட இருக்கு.

பிழைப்புக்காக பிரிந்து வந்து கொண்டிருந்தேன் மனது கிடந்து அடித்துக் கொள்ள… அந்த கவிதைய சேர்த்து நாட்பட்ட பிரிவின் பரிமாணங்களை கோர்த்திருந்த அந்த உகிர்நுதி கட்டுரை வாசிக்க வாசிக்க.. சுக ராகம் சோகம் தானேன்னு… மனசு bgm போட்டுது.. அதுதான் நல்ல எழுத்தின் அபாயம். நம்ம வலிக்கு அது இசை கொடுத்து விடும் .. அது தான் நடந்துச்சு.

முற்றிய காதலும்.. அதை சார்ந்த மனச்சிடுக்குகளும்.. வாசிக்கையில்.. எருக்கம் பூவின் குவிமுகிழை போலவே அழகில் குறைவொன்றும் இல்லாவிடினும் சூடக்கூடாதெனும் நிலை போல வருத்திற்று… மடலேறுதல்!

ல் உறவுகள் நீடிக்க quality time எவ்வளவு முக்கிய மென அவ்வளவு அழகா உண்மையா இருந்தது பூவிடைப்படினும் கட்டுரை …மகன்றில் பறவைகள் …யாண்டு கழிந்தன்ன … ப்யூர் பொயட்ரி!

னைந்த யானையின் வசீகரத்த … மழை நனைந்த தார்ச்சாலையை…அடர் கருமையை … குவளை கண்களை ன்னு … இத்தனையையும் ஒரே லைன்ல ரசிக்க… என்ன மாதிரி ரசனை வேணும்ல ன்னு சங்க கால ஒப்புமை போலவே… எங்கோ துவங்கி பசலை கண்கள்ள வந்து நின்ன விதம்.. அழகு!

ரோஜா மொக்கும் குருவித் தலையும் ஃபீல் குட் மூவி மாதிரி இருந்தது…
இப்படி சொல்லிட்டே போகலாம் போல ஒரு புத்தகம்!

இன்னுமின்னும் நிறைய எழுதுங்கள் ❤️

    ~வெண்பா.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    இவ்வகை