காட்சிப்பிழை

“அந்த மூத்த, முக்கியப் படைப்பாளி, உங்கள் பெயர் உட்பட இன்று இருக்கும் சிலரின் பெயர்களைத் தவிர்த்து, குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?” “அவர் எப்போதும் குனிந்தே பார்ப்பதால், தன் காலடியில் கிடப்பவர்களையே அவரால்...

ஊஞ்சல்

ஊஞ்சலுக்கு முன்பாகத் தொங்கும் கயிற்றின் முனையில் பிடிக்க ஏதுவாக முடிச்சிடப்பட்டு இருக்கும். காலங்காலமாக அக்கயிறைப் பிடித்து இழுத்து ஆடிய உள்ளங்கைகளின் வியர்வையும் அழுக்கும் கலந்து களிம்பேறி இறுகிப்போயிருக்கும் அந்த முடிச்சு முனை. பக்கவாட்டில்...

நதி

“ஒன்னயப் போலிஸ் தேடுச்சே ! என்னா விவரம்?” சக்கரத்தை ’சல்ல்’ என சுழற்றிவிட்டு கோட்டம் பார்த்துக்கொண்டே அய்யப்பனிடம் கேட்டார் ஃப்ராங்க்ளின் அண்ணன். சைக்கிள் கடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த அல்லது நானே எனக்குத் தோதாக போட்டுக்கொண்ட...

தாக்கணங்கு

காதல் தோன்றிய காலம் முதல் இன்று வரை, ஒரு பெண் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை அறிய இருக்கும் ஒரே வழி, அவள் தெருமுனையைக் கடக்கும்போது  திரும்பிப் பார்க்கிறாளா என்பதுதானோ என்பதுபோல் நின்று கொண்டிருந்தோம்...

விழுங்கிய கவளம்

“காட்ல எரியுரப்ப வீட்ல எரியக்கூடாதப்பா” வெண்ணைத்தாழியில் காப்பியை நிரப்பி எடுத்து வந்திருந்தார் சேது. அந்த இடத்தில் மிச்சம் ஏதுமன்றி துக்கத்தின் மிடறுகள் விழுங்கப்பட்டிருந்தன. யாருக்கும் உடலில் திராணி இல்லை என்பது போல் அமர்ந்திருந்தார்கள். ஈரம்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…