வாசனையறிந்த தெருநாய்
வாசலில் ஊளையிடும்
எனும் அச்சத்தின் மிடறு
நெஞ்சுக்குழியில் நிற்க
அக்குரலின் லயம்
தப்பித்தப்பி தன்வீடு
கடந்து தேயும்வரை
குருதிக்கறையின் மீது
துருவேறியத் துகள்கள்
உள்ளங்கை ஈரத்தில்
பிசுபிசுத்து உறுத்த
உள்ளே அமர்கிறது
ஓர் ஒத்திகை
மரணம்