Homeகவிதைகள்காற்று பறித்த மலர்

காற்று பறித்த மலர்

காற்று பறித்த
மலர்களிலொன்று
சுருண்டு படுத்திருக்கும்
நாயின் மீது உதிர்கிறது
ஏறி இறங்குமதன்
வயிற்றின் லயத்திற்கொப்ப
மெல்ல மெல்ல அசையும்
அம் மலர்
இம்முறை உள்ளில்லாடும்
காற்றுக்கு ஒப்புக்கொடுத்து
இன்னுமோர் உதிர்வைநோக்கித்
தயாராகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி