Homeகட்டுரைகள்பஃறுளி ; மனதிலிருந்து ஒரு மடல்

பஃறுளி ; மனதிலிருந்து ஒரு மடல்

ஃறுளி இங்கிருந்தே மாந்தரின நாகரிகம் தோன்றியதாக சொல்லப்படுவதும் உண்டு. அதற்கு ஏற்ற மாதிரி தான் இந்த நாவலும் வடிவமைக்கப்பட்டு இருக்கு.

காதல், அரசியல், நட்பு, வன்மம், மோதல், ஊர் பெருமை, உணவு, திருவிழானு எல்லாம் கலந்த ஒரு முழுமை பெற்ற பேக்கஜ். அதிகம் பிரேக் விடாம படிச்சா ஒரு படம் போல அப்டியே விசுவலாக கொண்டு போகும். கரண்ட்ல இருந்து அப்டியே பின்னோக்கி போய் திரும்ப நிகழ்காலத்துல கொண்டு வந்து முடிக்கிறாங்க. எந்த இடத்துலயும் கனெக்ட் விடாம அப்படியே ஒரு ஸ்ட்ரீம் போல போகுது.

எனக்கு கனெக்ட் ஆன சிலர்கள் பற்றி மட்டும்.

தேவா:– நட்புக்காக, தன் கண்ணனுக்காகவே வாழ்ந்து இருக்கார். அதே போல செல்வத்துக்காக அவரோட மெனக்கடலும் ரொம்ப பெரிய விஷயம். கண்டிப்பா ஓசியா எதையும் வாங்கிக்க மாட்டாருனு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து செல்வத்துக்கு தன்னால முடிஞ்ச உதவிகளை செய்ய நினைக்கிற அந்த மனசு தங்கம். ஒரு தவறு சுட்டி காட்டும் போது அதை உணர்ந்து சரி படுத்திக்கணும்னு நினைக்கிறது சிறப்பு. (கூட்டு குடும்பத்தில பெண்களுக்கு நடுக்கும் கொடுமைகளை கேட்கும் போது ). மாதவன் விஷயத்தில கண்ணன் செய்ரது தவறுனு தெரிஞ்சும் அதை கண்டிக்காமல் தவறான முயற்சி செய்து மாதவனை ட்ரான்ஸபெர் பண்ணவெச்சது அதை விட பெரிய தவறு. சில பிளாவ்ஸ் இருந்தாலும் தேவா நமக்கு தளபதி தேவா மாதிரி தான் தெரியறாப்ல .

செல்வம் :- தோழர்….இந்த மாதிரி தோழர்கள் இன்னும் திரை மறைவுல வாழ்ந்திட்டு தான் இருகாங்க. எந்த கட்சி பதவிகளும் இவர்களுக்கு பெரிசு இல்ல. கொள்கை என்ன சொல்லுதோ அதை மட்டுமே வாழ்வியல் நெறிமுறையை கடைபிடிக்கிற கூடிய ஒரு தோழர்.

தேவா தன்னை தோழர்னு சொன்னதுக்கு அவ்ளோ சந்தோஷம் மனசுல. தான் இப்படி தான் மத்தவங்க மனசுல இடம் பிடிக்கணும்னு நினைக்கிறது அந்த கொள்கையின் மேல் அவர் வெச்சு இருக்கும் அன்பு. 

கண்ணன் தனக்காக தன் குடும்பத்துக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தா, அட இப்பதான்பா தோழர்கள் கிளம்பினாங்க கொஞ்சம் முன்னாடி கிடைச்சு இருந்தா அவங்கள சாப்பிடவெச்சு இருக்கலாம்னு சொன்ன அந்த மனசு ரொம்ப பெரிசு.

அந்த பஸ் இங்க கண்டிப்பா நிக்கும் எல்லா கொஞ்சம் நேரம் காத்திருங்கனு போய் ஓவ்வொருத்தரையும் தடுத்து நிறுத்தும் அந்த பொதுவுடமை சிறப்பு. கடைசில அந்த பஸ் வந்து நின்றது செல்வத்தின் வெற்றி.

அதிர வைத்த அரசியல் படுகொலை…லீலாவதி தோழரின் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடி அதில் வெற்றி பெற்றவராய் உணரும் போது செல்வம் தன் தோழற்கு செய்ற மரியாதையாய் தான் தெரிஞ்சிது. 

அந்த ஒற்றைக்கையுடன் சுயமரியாதையுடன் பொதுவுடைமை பேசும் செல்வம், ஒரு உண்மையான தோழரின் அடையாளம்.

கோமதி;- அட்டை படத்தில் வீற்று இருக்கும் தேவதை போல தான் இவங்க.  எங்கு இருந்து ஆரம்பிக்க??? ஒரு தமிழ் ஆசிரியர் தன் துறை சார்ந்து அதில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளணும், தன்னால முடிஞ்ச வரை மாணவர்களின் நலன் கருதி அதிகம் மெனக்கெடுறதுனு ஒரு பண்பட்ட ஆசிரியரின் குணங்களை உள்ளடுக்கி இருக்குறாங்க. கணவர் வீடு தன் வீடாக மாற ஒரு பெண்ணுக்கு எவ்வளவு உளவியல் காரணங்கள் இருக்கின்றன என ஒரு பெண்ணின் பார்வையில் ஆசிரியர் எழுதி இருப்பது அவ்வளவு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. போலவே, தோழர் லீலாவதி எனும் நடுத்தர வர்க்கத்தில் இருந்து வந்த பெண் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பிரச்சனைகளை அரசியல் பார்வையில் கையாண்ட விதமும் அற்புதம்.

கண்ணன் தன்னை எவ்ளோ தாங்கினாலும் அவளுக்கு என்று ஒரு சுதந்திரம் தேவைப்படுது இது எல்லா பெண்களுக்கும் பொருந்தும். 

கண்ணன் இல்லாமல் தனிமையில் இருக்கும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து தனக்கு பிடிச்ச பாடல்களை கேட்கும் போதும், பாத்ரூம் போறது கூட சில நெருடலை ஏற்படுத்தறதுனு எதார்த்தங்களை போட்டு உடைச்சு இருக்காங்க ஆசிரியர். தன் வீடுபோல இல்லாம அந்நியமாக தோன்ற விஷயம் ஒரு பெண் இதை வெளிப்படுத்தி இருபங்களானு தெரியல. 

தன் கணவனுக்கு பிடிக்கலைனு தெரிஞ்சு எந்த தப்பும் செய்யாத மாதவனை தள்ளி தான் வெச்சு இருத்தா. ஒரு சூழல்ல கண்ணன் மேல அவளுக்கு கோவம் வருது அது முற்றிலும் நியாயமாய் தான் படுது. தன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வராம விட்டுட்டு போன போதும், தன் திறமைகள் அந்த பள்ளிக்கு பெருமை தேடி தருகிறத ஒரு வாழ்த்துக்கூட சொல்லாம கடந்து போன போதும், அவனுக்கு பிடிக்காததை செஞ்ச போது அவளை கேரக்டர் அசாசினேஷன் பண்ணும் போதும், தனுக்கு தப்புனு படர விஷயத்தை எதிர்த்து கேக்கும் போதும், இது தவறுன்னு சமூகம் சொல்லும்னு தெரிஞ்சும் தாண் தவறு செய்யலைனு என் மனசுக்கும் புத்திக்கும் தெரிஞ்சா போதும் நினைச்சு செயற அவளின் எல்லா செயலும் நியாயமானதா தான் எனக்கு தோணுச்சு.

மாயக்கண்ணன் பெற்றவர்களுக்குத் தங்கப்பிள்ளை. நட்புக்கு மரியாதை, ஊர்பாசம், தோழர்களை மதித்தல்,பொதுவுடமை பேசுதல்,மனைவி மீது தீராக் காதல் என் நிறைய சொல்வதற்கு இருந்தாலும், மேட்டிமைத் திமிர், ஆதிக்க, மூர்க்க குணம், இவற்றைத் தாண்டிய ஆணாதிக்கவாதி. பொதுவுடமை, முற்போக்கு, பெண்ணியம் பேசிவிட்டுத் தன் மனைவியை அடிமைப்படுத்தும் சிறுமைப்படுத்தும் ஒரு ‘சாடிஸ்ட்’ ஆகத்தான் என் மனதில் நிக்குறாரு. சொல்வதற்கு ஏதும் இல்லை.

-யுவராணி.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை