Homeகட்டுரைகள்சொம்புநீர்ப்பூ : மடல்

சொம்புநீர்ப்பூ : மடல்

வணக்கம். சொம்புநீர்ப்பூ புத்தகம் குறித்த இந்த மடலை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

உங்களுடைய ஒரு கதையை படித்தாலே எளிதில் கடந்து விட முடியாது, அதுவும் இந்த தொகுப்பு, சொம்புநீர்ப்பூ, பல நினைவுகளைத் தூண்டி எழுப்பிவிட்டுப் போகிறது.

அருமையான, அழகான, அசாதாரணமான கதைகள்.

சொம்புநீர்ப்பூ: 

                           சுசியின் ஒரு நாளை பற்றிச் சொல்லும் கதையில் எத்தனை எத்தனை விவரணைகள் – ஒரு மதியத்தின் அமைதி, குழந்தையின் அழகு, பறவையின் வாழ்வு, சுசியின் உயிர் வாசம் என…
சுசிக்கு சொம்பு கழுத்தில் அழுத்தியது ஆனால் எங்களுக்கு இந்த கதை மனதில் ஒரு அழுத்தத்தை தருகிறது..

தொன்மம்: 

                      அழகான கதை.. கோவில், சுவர், கிணறு, பொட்டல் என அழகிய விவரிப்புகள்..

” சைக்கிள் எடுத்து ஒரே டக்கில்” எனும் நுட்பம். கடைசிவரை பரபரப்பாக சென்று கோவில் சிலையின் தொன்மம் போல அழகிய முடிவு.

பாரம்: 

எனக்கு மிகவும் பிடித்த கதை.. ” மரணமோ அவமானமோ நேரடியாக நிகழ்ந்துவிடும்பொழுது அதன் போக்கில் கடந்தும் விடுகிறது”

வாழை, வள்ளியம்மை, கடலில் விளையாடும் பெண்கள் என எல்லா விளக்கங்களும் நுணுக்கங்களும் அருமை வாழையில் இவ்வளவு இருக்கா

கடலின் அழகை…  வேலை முடித்து மதியம் உறங்க போகும் பேரிளம்பெண்ணுடனும்.. தூக்கத்தில் இருந்து எழும் குழந்தையுடனான ஒப்பீடுகள் அருமை…

கதையின் இறுதியை நெருங்கும் போது வாழையை பற்றியும்.. வள்ளியம்மை பற்றியும் சிந்தனைகள் மாறிமாறி மனதில் சுழல்கின்றன..

பாரம் தலைப்பு – வாழை குலையினால் மரத்திற்கு ஏற்பட்ட பாரமா.. வள்ளியம்மைக்கு மனதில் ஏற்பட்ட பாரமா.. எழுத்தாளருக்கு மனதில் ஏற்பட்ட பாரமா.. வாழைத்தண்டு குழிக்கு மூடப்பட்ட இலையின் மேல்வைத்த கல்லின் பாரமா.. இன்னும் பல யோசனைகள்.. அருமையான தலைப்பு..

ஓவியம் : 

                   பள்ளி நாட்கள் , கிரிக்கெட் அடடா பல நினைவுகளை தட்டி எழுப்புகிறது.. கிரிக்கெட் மீதான உங்கள் காதல் அழகாக வெளிப்படுகிறது சார்  – மேட்ச், பிட்ச், கிளவுஸ், ball என…

அழகிய நட்பு எப்போதுமே ஒரு அழகிய ஓவியம் தான்.

நுரை:

            ‌கற்குளத்தில் நீங்கள் கூறுவது போல ஆண் பிள்ளைகளின் பதின் பருவ மாற்றம் அதிகம் பேசப்படாதவை..

நுரையிலும் அதை பற்றி பேசி இருக்கிறீர்கள்.

வாடகை cycle- உண்மை..உண்மை.. ஓட்டி ஓட்டி சைக்கிளை தேய்த்து விடுவோம் விடுமுறை முடிவதற்குள்…

சிற்பம்: 

               சிற்பங்கள் பற்றி அழகிய வர்ணனைகள்.. நீங்க கம்போடியாவில் ரசிச்தவை எல்லாம் கதையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.. 

படப்பிடிப்புதளம் அதன் நுணுக்கங்கள் ..

” ஒன்றை ஆக்கும் இடத்தில் அதைத் துய்ப்பவர்கள் இருக்கக் கூடாது”

Postmodernism, final twist என இக்கதை குறித்து பேச நிறைய இருக்கிறது. 

குழி:

          கொரோனா கால பரிதாபங்கள்.. 

கி.மு, கி.பி , கொ.மு, கொ.பி

“தற்காலிகங்கள் நிரந்தரமனவை என்றாகும் போது மனம் மீயொலி கேட்காமல் திசை தப்பிய வௌவாலின் சுவர்முட்டல்கள் போல ஆகும்” என்னவொரு உவமை சார் 

அழகிய தமிழ் சொற்கள் பிரயோகம்.. 

காணொளி குவிமைய கூடுகைகள், இணையவழி கூடுகைகள் , செவித்திறன் அணைத்துவைக்கப்பட்டு இருக்கிறது 

” அத்தனை அழுக்கையும் சேர்த்து ( அவரின் மனதின் அழுக்கையும் ) ஒரு குழியில் போட்டிருந்தான்”

புன்கணீர்: 

                      அழகிய காதல் கதை.. 

பாலா, ஆனந்தி, டெல்லி, புதிய ஊர், புதிய வாழ்க்கை, வீடு, அவர்களது காதல் என அனைத்தும் அழகு.

“எந்த எதிர்பார்ப்பும் நோக்கமும் இல்லாமல் செலுத்தபடும் ஓர் எளிய அன்பிற்கு என்று ஒரு தனித்துவம் உண்டு. அது ஒரு போதும் கைவிடாது. தன்னை முறித்துக்கொள்ளாது”

விழுங்கிய கவளம்: 

                                         கிரிக்கெட்டோ.. சீட்டாட்டமோ.. செஸ்ஸோ.. நீங்கள் விவரிக்கும் போது அந்த ஆட்டத்தை ஆடியது போன்ற ஒரு உணர்வை கொடுத்து விடுகிறீர்கள். 

 சிப்பாய் மெல்ல மெல்ல நகர்ந்து ராணியாகுதல் – செஸ் ஆட்டத்தை ரேணுகாவின் வாழ்க்கையோடு ஒப்பிடுதல் 

” விழுங்கிய கவளத்திற்கு ருசி ஏது?” என்கிறீர்கள், ஆனால் நாங்கள் படித்து விழுங்கிய உங்கள் கதை கவளங்கள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ருசியை தருகிறது.. 

வாழ்த்துக்களும் அன்புகளும் சார் 

– உமா

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை