Homeகவிதைகள்களிம்பேறிய அம்மன்சிலை

களிம்பேறிய அம்மன்சிலை

களிம்பேறிய அம்மன்சிலை
கருமை பளபளக்க
நீர்வாங்கி மினுங்குகிறது
விடுமுறை விளையாட்டில்
சிறுபிள்ளைகள்
இறுகக் கட்டிய
களிமண் கோயில்
மழைக்கு நெகிழ்கிறது
கனவிலிருந்து காலைக்குள்
புகும் மனக்குளத்தில்
இப்படி
சுழன்று வீழ்கிறதொரு
மலர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை

ஓவியம்

சிற்பம்

குழி