நர்சிம்

சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-இல் தொடங்கி, சிறுகதை, நாவல், கவிதை என மூன்று வடிவத்திலும் பயணப்படும் வெகுசில எழுத்தாளர்களுள் நர்சிம் குறிப்பிடத்தக்கவர்.

‘மனித உறவுகளின் எழுத்தாளர்’ என்று பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர். இவரது மதுரைக் கதைகள்’ மிகவும் பிரபலமானவை.

அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012), பைத்தியக்காலம் (2017), மதுரைக் (2017), L (2020), 5 (2021), நிகழ்ந்தாய் முகிழ்ந்தேன் (2021), கற்குளம் (2023) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும்…

தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013), உன்னோடான உரையாடல் (2020), காழ் (2022) ஆகிய கவிதைத் தொகுப்புகளும்…

அலப்பறை (2017), சார்மினார் எக்ஸ்பிரஸ் (2020), குற்றப்பொய்கை (2021), மிளிர்மன எழில்மதி (2021), பஃறுளி(2024) ஆகிய நாவல்களும் இதுவரை வெளிவந்துள்ளன.

அய்யனார் கம்மா என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு அது ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.