பூட்டு

”யப்பா இந்த எடம்தான்ப்பா” நான் அங்கும் இங்கும் தவிப்பாகப் பார்ப்பதைக் கண்டு மிகுந்த உற்சாகமாகச் சொன்னான். வண்டியில் அமர்ந்து என் கழுத்தில் கைபோட்டுத் தன்பக்கமாக இழுப்பதாக நினைத்த அவன் பிஞ்சுக்கரங்கள் பஞ்சுப் பொதிபோல் இருந்தது...

திருத்தேர்

‘யம்மா..ஒன்னய என்னான்னு கும்புடனுமாம்’ காலை வெய்யிலில் மினுங்கியது மீனாட்சியம்மன் கோயிலின் கோபுரம். என்றைக்கும் இல்லாத வழக்கமாக இரு கைகளையும் தூக்கித் தலைக்கு மேல் வைத்து பின்னோக்கி வளைந்து தெற்கு கோபுரம் நோக்கிக் கும்பிட்டான் கனகசபை. கக்கத்தில்...

பிடரி

”உங்கள் காதலருக்காக நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?” இதற்காகத்தான் இங்கெல்லாம் வரக்கூடாது என்று மூன்றாவது முறையாக நினைத்தேன். நன்கு குளிரூட்டப்பட்ட உயர்தர ஏழுநட்சத்திர விடுதியின் அலுவல் நிமித்தக் கூடுகையறை அது. மிதமிஞ்சிய குளிர் ஒருபுறம்,...

’துயரங்களின் ஒரு பகுதி’- சு.தீபிகா

கவிதை, நாவல், சிறுகதை என எழுதும் பன்முகம் கொண்ட எழுத்தாளர் நர்சிம். சமீபத்தில் இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு ‘சொம்புநீர்ப்பூ’. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளின் தலைப்பே வாசகர்களைக் கவரக்கூடியதாகப் பழந்தமிழ்ச் சொற்களில் இருக்கிறன....

’குருதியின் சூடு’ : சிராஜுதீன்

'ஒரு குண்டில பேழுவாங்ஞ்ஞேனு' ஒட்டித் திரியும் நண்பர்களைப் பார்த்து எள்ளளோடு சொல்வார்கள். அப்படித்தான் மாயக்கண்ணனும் தேவராஜனும் இருக்கிறார்கள். மாயக்கண்ணனின் திருமண வாழ்வில் கோமதி இணைகிறாள். கோமதி தமிழாசியர், மாயக்கண்ணனும் ஆசிரியர் திருமணத்துக்கு முன்னர்...

கவிதை
வண்ணத்துப்பூச்சி

அத்தனை வண்ணமயமாய்
அவ்வளவு சிறகடிப்பாய்
பறக்கிறது

அப்படியும் அதன் பெயர்
பூச்சி

அப்படி அழைத்தாலும்
எப்படிக் குறைத்தாலும்
அது பறந்து பாடும்
தன் காலத்தை…