‘ஒரு குண்டில பேழுவாங்ஞ்ஞேனு’ ஒட்டித் திரியும் நண்பர்களைப் பார்த்து எள்ளளோடு சொல்வார்கள். அப்படித்தான் மாயக்கண்ணனும் தேவராஜனும் இருக்கிறார்கள். மாயக்கண்ணனின் திருமண வாழ்வில் கோமதி இணைகிறாள். கோமதி தமிழாசியர், மாயக்கண்ணனும் ஆசிரியர் திருமணத்துக்கு முன்னர் கோமதி வேறொரு ஊரில் பணியாற்றுகிறார். மணமான பின்னர் மாயக்கண்ணனின் ஊருக்கே மாற்றலாகி வருகிறார். இந்த மாற்றல் குறித்த சச்சரவுக்கெல்லாம் முகம் நாவலில் இடம் கொடுக்கவில்லை. ஆனால் மாயக்கண்ணனுக்கு வர வேண்டிய துணைத் தலைமையாசிரியர் பதவி தள்ளிப் போவதோடு மாதவன் என்ற ஏ.ஹெச்செம் வந்து இறங்குகிறார்.
இங்கே இருந்து தான் நாவல் தடதடத்து ஓடத் தொடங்குகிறது, பஃறுளி.
மாணவர்கள் மீதான கரிசனம் பள்ளியின் தரத்தை மேம்படுத்துவது என்ற நோக்கம் மாதவனுக்கு இந்நோக்கத்திற்கு சற்றும் சளைப்பில்லச்தாவர் தான் எம்.கே. (மாயக்கன்ணன்) தான் படித்த பள்ளயில் தான் ஆசிரியராக இருக்கும் போது தான் ஏஹெச்செம்மாக வந்திருக்க வேண்டிய ஒரு பதவிக்கு மாதவன் வந்து செயல்படுவதாப் என்கிற எம்.கே வின் உளவியலில் வெளிப்படும் வக்கிரத்தை மிகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் நர்சிம்.
தன்னுடைய விடுமுறைக்காலத்தை நிறைவு செய்து தமிழ்ப்பாடமெடுக்க தமிழாசிரியர் இல்லாத அந்தப் பள்ளிக்கு தமிழம்மாவாக வந்து சேர்கிறார் கோமதி. அன்றைய தினம் மாதவன் விடுப்பில் இருக்கிறார். பள்ளியில் அவரைப்பற்றி ஆசிரியர்கள் மாணவர்கள் சொல்லும் பெருமிதச் சொற்களைக் கேட்டு கோமதிக்கு தன் கணவன் மாதவனைப் பற்றிச் சொன்ன வசவுகள் வந்து மூளைத்திரையில் வந்து போகிறது. திரையில் வந்து போனதாலே மாதவனைச் சந்திக்கும் ஆவல் பெருகுகிறது.
‘தனக்குப்பிடித்தவர்கள் தனகுப்பிடிக்காவர்களிடமும் பகைமை கொள்ள வேண்டும்’ என்ற மனித சராசரி உளவியல் தடதடத்துப் பயணிக்கத் தொடங்குகிறது எம்.கே.விடம். இத் ‘தடதடப்’ பயணத்தில் தான் கணவன் மனைவிக்குள்ளான சண்டை ஊடல் இரு பெற்றோர்களின் குணாதிசயங்களை மிகக் காத்திரமாகப் பதிவு செய்திருக்கிறார் நர்சிம்.
தோழர் லீலாவதியை வெட்டிக் கொன்ற போது அவர் உடலிலிருந்து வெளியேறிய குருதியின் சூட்டை வாசகனுக்கு கடத்தியதில் தான் இந்த நாவலின் ஒட்டு மொத்த முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு இருக்கிறது.
நாவல் பயணப்படும் அந்தத் தளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் களச் செயல்பாடுகளை விதந்தோதலின்றி போகிற போக்கில் சொல்லப்பட்டது தான் நாவலின் முத்தாய்ப்பு.
–சிராஜுதீன்